▪️பிரேசிலின் தெற்கு பகுதியில் கடுமையான வெப்ப மண்டல புயல் தாக்கியுள்ளதால், அங்கு கனமழை பெய்யும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

▪️இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 110 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசியது. 


▪️இதில் கரையோர பகுதிகளில் இருந்த ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.


▪️இதன் தொடர்ச்சியாக ரியோ கிராண்டே டோ சுல், கேடரினா ஆகிய மாகாணங்களில் கனமழை பெய்து வருகின்றது. 


▪️இதில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அர்ஜென்டினா மற்றும் உருகுவே எல்லையில் உள்ள சுமார் 60 நகரங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.


▪️புயல் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. இதில் சில வீடுகள் இடிந்து விழுந்து 44 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 224 பேருக்கு படுகாயம் அடைந்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.