தென்னாபிரிக்காவில் உள்ள மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்கில் உள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நள்ளிரவு 1.30 மணிக்கு தீயணைப்புத் படையினருக்கு தீ விபத்து குறித்து தகவல் கிடைத்துள்ளது.

விரைந்து சென்ற தீயணைப்புப் படை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். நேற்று காலையில் தான் தீ முழுமையாக அணைக்கப்பட்டதாகவும் ஆனாலும் கட்டடத்திலிருந்து புகை வெளியேறி கொண்டிருந்தன.

இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது மேலும் அதிகரித்துள்ளது.

இதுவரையில் கட்டடத்தில் இருந்து 73 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

தீ விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.