கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டில் சுமார் 9ஆயிரத்து 700 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பேராசிரியர் வசந்த அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் புள்ளி விபரவியல் தகவல்களின் அடிப்படையில் இந்த விடயத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் 3ஆயிரத்து 406 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் இதில் 2ஆயிரத்து 832 பேர் ஆண்கள் எனவும் தெரியவந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி நிலைமைகள் காரணமாக கடந்த ஆண்டில் 192 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மொத்த தற்கொலைச் சம்பவங்களில் ஐந்து வீதமான தற்கொலைகள், பொருளாதார நெருக்கடி காரணமாக இடம்பெற்றுள்ளதாக பேராசிரியர் வசந்த அத்துக்கோரள மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக