நேற்று (12) நள்ளிரவு முதல் புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ராகம மற்றும் களனிக்கு இடையில் ஹொரபே புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தின் கூரையில் இருந்து தவறி விழுந்து 18 வயதுடைய இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த மரணத்திற்கு தாம் பொறுப்பேற்றால் உடனடியாக பதவி விலகுவேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக