கொழும்பு துறைமுகத்தில் இந்திய யுத்த கப்பல் : மாணவர்கள் பார்வையிட சந்தர்ப்பம்!

இந்திய கடற்படைக்கு சொந்தமான INS Delhi எனும் யுத்த கப்பல் இன்று (01) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்த கப்பல் 163 மீற்றர் நீளமுடையது.

கப்பலில் வருகை தந்த கடற்படை வீரர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா செல்லவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அத்துடன், INS Delhi கப்பலை பார்வையிடுவதற்கு பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல் எதிர்வரும் 3 ஆம் தகதி வரையில் நாட்டில் நங்கூரமிடப்பட்டிருக்கும். 

மேற்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படை கப்பலுடன் பயிற்சி நடவடிக்கைகளிலும் குறித்த கப்பல் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.