கொள்கலன் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி போக்குவரத்து கட்டணத்தை 5 சதவீதத்தால் உயர்த்துவதற்கு கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள இதனை தெரிவித்தார்.

எரிபொருள் விலை அதிகரிப்புடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விலை உயர்வுக்கு அமைய, இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் அதிகரிக்கலாம் என கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.