கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுப்பு


தென்மேற்கு பருவபெயர்ச்சி மழை காரணமாக கடல் பிராந்தியங்களில் காற்று அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

சில சந்தர்ப்பங்களில் மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.


ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற் பிராந்தியங்களிலும் புத்தளம் முதல் மன்னார் ஊடாக திருகோணமலை வரையான கடற்பிராந்திரயங்களிலும் மணித்தியாலத்துக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும்.


குறித்த பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

கருத்துகள்