எதிர்வரும் டிசம்பர் மாதம் அரச ஊழியர்களுக்கு பல சம்பளச் சலுகைகளை வழங்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக 100 வீதம் உறுதியாக கூறமுடியும் என காலி பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், அரச ஊழியர்களுக்கும் நிவாரணம் வழங்குவது போன்ற சலுகைகள் கிடைக்கும் என்பது தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.
காலி கடவத் சத்தரா பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கிராம உத்தியோகத்தர்கள் குழுவொன்று தமக்குக் கிடைத்த சீருடை கொடுப்பனவு மற்றும் எரிபொருள் கொடுப்பனவின் போதாமை தொடர்பில் உண்மைகளை முன்வைத்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
IMF அதிகாரிகள் நாட்டில் தங்கியிருப்பதால் நிவாரணம் வழங்குவதில் ஏற்பட்ட இடையூறு எதிர்வரும் 21ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் முடிவுக்கு வரும் எனவும் அதன் பின்னரே அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என்பதில் 100% உறுதியாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக