கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு




எல்பிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் உள்ள கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

எல்பிட்டிய, அனுருத்தகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


வேறு பிரதேசத்தை சேர்ந்த சிறுவன் உள்ளிட்ட குடும்பம் நேற்று வாடகை அடிப்படையில் குறித்த வீட்டில் வசிக்க வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


வீட்டில் உள்ள பெரியவர்கள் வீட்டு வேலை செய்து கொண்டிருந்த போது, வீட்டின் காணியில் உள்ள சிறிய கிணற்றில் சிறுவன் விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்