இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக நாளை 02 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.
அதன்படி, 3 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே பலமான நட்புறவை கட்டியெழுப்புவதில் முக்கிய அடையாளமாக இந்த விஜயம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக