மூன்று ஆண்டுகளுக்குள் அஸ்வெசும நிவாரணம் நிறுத்தப்படும் என்று பெண்கள் குழந்தைகள் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் துறையின் செயல் அமைச்சர் அனுபா பாஸ்குவேல் கூறுகிறார்.
அஸ்வெசும நிவாரணம் பெரும் மக்களை பலப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அதன்படி, சமுர்த்தி பிளஸ் திட்டத்தின் கீழ், அந்த மக்கள் பல்வேறு தொழில்களில் பணியாற்ற உள்ளனர்.
இது தொடர்பில் அமைச்சர் அனுபா பாஸ்குவேல் கூறுகையில், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்களிடம் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
கருத்துகள்
கருத்துரையிடுக