2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியான நிலையில் அமைய தேசிய மட்டத்தில் சிறப்பு சித்தி பெற்றுக்கொண்ட மாணவர்கள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய, தேசிய ரீதியாக பௌதீகவியல் பிரிவில் கொழும்பு ரோயல் கல்லூரியின் பானுல பெரேரா முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.

அதேநேரம், தேசிய ரீதியில் உயிரியல் பிரிவில்  மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் மாணவி பிரமுதி பாஷனி முனசிங்க முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.

அத்துடன், தேசிய ரீதியில் வணிக பிரிவில் கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தின் கவ்தினி தில்சரனி முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.

▪️அத்துடன், தேசிய ரீதியில் பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் காலி ரிச்மண்ட் கல்லூரி மாணவன் சமுதிதா நயனப்ரியா முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.