துப்பாக்கிகள், வெடிபொருட்களுடன் இராணுவ அதிகாரி கைது


▪️விடுமுறையில் வீடு திரும்பிய இராணுவ சார்ஜென்ட் ஒருவர், துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டதாக சார்லியத்த பொலிஸார் தெரிவித்தனர். 

▪️டி-56 துப்பாக்கி, எண் இல்லாத 12 போர் துப்பாக்கி, 200 டி-56 ரவைகள், 02 12 போர் துப்பாக்கி தோட்டாக்கள், 2 டெட்டனேட்டர்கள், 70 கிராம் சிறிய ஈய பந்துகள், 2 கிலோ ஈயம் உள்ளிட்ட வெடிபொருட்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 
▪️சந்தேக நபர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், சார்லியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்