குருணாகல், மஹவ பிரதேசத்தில் தனது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமையினால் மன வேதனை அடைந்த 44 வயதுடைய தாயொருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக மஹவ பொலிஸார் வெளியிட்ட தகவலுக்கு அமைய, உயிரிழந்த பெண்ணின் மகன் மேலும் மூன்று இளைஞர்களுடன் சேர்ந்து நபர் ஒருவரை தாக்கியதாகவும்,

அந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து வெளியேறியதாகவும் தலைமை பொலிஸ் பரிசோதகர் சஞ்சீவ பண்டாரநாயக்க தெரிவித்தார்.

எப்படியிருப்பினும் இந்த தாக்குதலின் அடிப்படையில் குறித்த பெண்ணின் மகன் சந்தேக நபராக கைது
செய்யப்பட்டு மஹவ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன், பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மகன் கைது செய்யப்பட்டதன் காரணமாக இந்த பெண் உயிரை மாய்த்ததாகவும் ஆனால் மகன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சட்டத்திற்கமைய, அவரது மகன் கைது செய்யப்பட்டதாகவும்
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.