இலங்கை அணி தோல்வி அடைந்தமை குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு கோரிக்கை

TestingRikas
By -
0

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி தோல்வி அடைந்தமை குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு புரவெசி பலய அமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் இன்று முறைப்பாடொன்றை அளித்துள்ளது.

இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான புரவெசி பலய அமைப்பின் தலைவர் ஜமுனி கமந்த துஷார இந்த முறைப்பாட்டை அளித்துள்ளார்.

இறுதிப் போட்டியில் இலங்கை அணி மிகக் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தமை  பலமான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போட்டியை காட்டிக்கொடுத்துள்ளனரா என்ற சந்தேகம் எழுவதாகவும் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில், இலங்கை அணி 50 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

இதுவே, இதுவரை இறுதிப் போட்டிகளில் இலங்கை அணி அல்லது வேறு எந்த அணியும் பெற்ற குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)