நாவலப்பிட்டி மஹகும்புரு பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் நேற்று (02) பிற்பகல் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாவலப்பிட்டி, வெரலுகஸ்ஹின்ன பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புதிதாக கட்டப்படும் தடுப்பணையின் அஸ்திவாரம் வெட்டிக் கொண்டிருந்தவரின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.
குறித்த மண்மேடு அகற்றப்பட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
கருத்துரையிடுக