சீனிகம ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் காரணமாக இன்று (01) முதல் எதிர்வரும் 04 ஆம் திகதி வரை காலி வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வாகன நெரிசல் ஏற்படாத வகையில், ஊர்வலம் இடம்பெறுவதால், காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் போக்குவரத்து அதே பாதையில் திருப்பி விடப்படும்.
எவ்வாறாயினும், கொழும்பிலிருந்து காலி நோக்கிச் செல்லும் வாகனங்கள் மீட்டியகொட பொலிஸ் பிரிவில் மீட்டியகொட, கிரலகஹவெல சந்தியில் இடதுபுறமாகத் திரும்பி அளுத்வல, சரண சந்தி, கோனபீனுவல நான்கு வழிச் சந்தி ஊடாக குமாரகந்த சந்தி ஊடாக காலி வீதிக்குள் நுழைய முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக