கஹட்டோவிட்ட, குரவலான மற்றும் ஓகொடபொல பிரதேசங்களில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பாய், கட்டில் விரிப்பு, தலையணை, குடிநீர் போத்தல் மற்றும் சுத்தம் செய்வதற்கு தேவையான பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் அடங்கிய பொதிகள் இன்றைய தினம் (04) கஹட்டோவிட்ட பாதிபிய்யதுல் காதிரிய்யா அரபுக்கல்லூரி கட்டிடத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் வெளிநாடுகளிலும் தொழில் புரியும் ஊர் நலன் விரும்பிகள் உட்பட பலரின் நன்கொடைகளினால் திரட்டப்பட்ட நிதியிலிருந்து மேற்படி பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.
இதன்போது அத்தனகல்ல பிரதேச செயலாளர் அலுவலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கஹட்டோவிட்ட, கஹட்டோவிட்ட மேற்கு, குரவலான மற்றும் ஓகொடபொல பிரதேசங்களுக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர்கள், அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர்களான இன்சாப் மற்றும் பிர்தௌஸ் ஹாஜியார் மற்றும் பிரதேச வாலிபர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.







