சென்னை துறைமுகத்திலிருந்து மெட்ரிக் டொன் 950 பருமனான அத்தியாவசிய நிவாரணப் பொருட்களுடன் கூடிய கப்பல் கொழும்பு நோக்கி புறப்பட்டுள்ளது.
தித்வா புயலால் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ள உணவுப் பொருட்கள் மற்றும் ஆடைகள் கொண்ட இந்த கப்பல், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனுப்பப்பட்டுள்ளது.
அமைச்சர் விஜித ஹேரத்தின் ஆலோசனையின் படி, சென்னை துணை கமிஷனராக உள்ள டாக்டர் கணேஷ்நாதன் கீதீஸ்வரன் அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. இன்று (06) காலை இந்த நிவாரணக் கொடையினை முதல்வர் ஸ்டாலின், உத்தியோகபூர்வமாக வைத்தியர் கணேஷ் அவர்களிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்வில் தமிழ்நாடு அரசின் அதிகாரிகளும், சென்னை இலங்கை துணை தூதரக அதிகாரிகளும் பங்கேற்றனர்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

