முன்னாள் ரிதீகம பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். மும்தாஸ் அவர்களின் முயற்சியில் இலவச மூக்குக் கண்ணாடிகள் விநியோகம் 2019

Rihmy Hakeem
By -
0


கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கெளரவ வட மேல் மாகாண சபை உறுப்பினரும் உயர்நீதிமன்ற சட்டத்தரணியுமான ரிஸ்வி ஜவஹர்ஷா அவர்களின் நிதி ஒதுக்கீட்டில், முன்னாள் ரிதீகம பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.மும்தாஸ் அவர்களின் ஏற்பாட்டில், வடமேல் மாகாண சுகாதார மற்றும் மகளிர் விவகார அமைச்சுடன்  இணைந்து சமூக, சேவைகள் திணைக்களம்  நடாத்திய இலவச கண்பரிசோதனை முகாமில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (2019.01.11) தெலும்புகொல்ல முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வை  முன்னாள் ரிதீகம பிரதேச சபை கெளரவ உறுப்பினர் ஏ.ஆர்.எம். மும்தாஸ்  அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். 

இந்நிகழ்வில் அப்பகுதி கிராம சேவை உத்தியோகத்தருடன் ரிதீகம பிரதேச செயலக சமூக  சேவைகள் திணைக்கள  உத்தியோகத்தர்கள் உட்பட ஊர்மக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

தகவல் : திக்ருல்லாஹ் ஜிப்ரி, குருநாகல் பிரதேச சபை உறுப்பினர் 



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)