Badriyans Youth Football Tournament - 2019 இல் கஹட்டோவிட்ட பத்ரியன்ஸ் யூத் அணி சம்பியன்

Rihmy Hakeem
By -
0
கஹட்டோவிட்ட பத்ரியன்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட 2014 O/L Batch இற்கு கீழ் பட்டோருக்கான Badriyans Youth Football Tournament - 2019  கால் பந்தாட்ட சுற்றுப் போட்டியில் கஹட்டோவிட்ட பத்ரியன்ஸ் அணி 1 - 0 என்ற அடிப்படையில் கஹட்டோவிட்ட JF அணியினை வீழ்த்தி சாம்பியன் கிண்ணத்தினை வென்றது. 

சிறந்த கோல் காப்பாளராக பத்ரியன்ஸ் அணியின் அம்மார் தெரிவு செய்யப்பட்டார். சிறந்த Defender ஆக JF அணியின் ரிஸ்னி தெரிவானார். இறுதிப் போட்டியின் சிறந்த கோல் புகுத்தியவராக பத்ரியன்ஸின் அர்ஸலானும், அதி கூடிய கோல்களைப் பெற்ற வீரராக பத்ரியன்ஸின் ஷாபிக் மற்றும் தொடரின் சிறந்த வீரராக பத்ரியன்ஸின் ரஹ்மான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(கஹட்டோவிட்ட ரிஹ்மி)







கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)