JM Media Productions & College இனால் ஏற்பாடு செய்யப்பட்ட Media Tips மாபெரும் ஊடக செயலமர்வு

Rihmy Hakeem
By -
0
JM Media Productions & College இனால் ஏற்பாடு செய்யப்பட்ட Media Tips மாபெரும் ஊடக செயலமர்வு சென்ற ஞாயிற்றுக்கிழமை (06) மாவனெல்லஇந்நிகழ்வில் பிரதான வளவாளர்களாக Capital FM இன் பிரதானி ஸியா உல் ஹசன் உள்ளிட்ட முன்னணி ஊடகவியலாளர்கள் கலந்து சிறப்பித்தனர். செயலமர்வில் கலந்து கொண்டவர்களுக்கு கேள்விளைக் கேட்கவும், கருத்துக்களைக் கூறவும் பல சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டதுடன், ஊடகத்துறையில் வெற்றிகரமாகப் பயணிப்பதற்கான வழிகாட்டலும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. முழுநாள் செயலமர்வாக நடைபெற்ற இந்த நிகழ்வில், கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல்வேறு தூரப் பிரதேசங்களில் இருந்து பலர் இதற்காக வந்து கலந்து கொண்டதுடன், திருப்தியுடன் வெளியே சென்றமை காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

(கஹட்டோவிட்ட ரிஹ்மி)


























கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)