உடுகொட பிரதேசத்தில் நடைபெற்ற இலங்கையின் 71 ஆண்டு சுதந்திர தின நிகழ்வு

Rihmy Hakeem
By -
0

இலங்கை தாயகத்தின் 71ம் வருட சுதந்திர தினத்தை முன்னிட்டு உடுகொட ஜின்னா விளையாட்டு ஒன்றியம் மற்றும் உடுகொட  அரபா மஹா வித்தியாலய நிர்வாகம் இணைந்து ஏற்பாடு செய்த சுதந்திர நிகழ்வு, இன்று காலை உடுகொட அரபா மைதானத்தில் நடைபெற்றது.

சிறப்பு அதிதிகளாக நிட்டம்புவ பொலிஸ் நிலைய அதிகாரி ,உடுகொட அரபா பாடசாலை அதிபர் அப்துல் அலீம் , மற்றும் அத்தனகல்ல  பிரதேச சபை உறுப்பினர் சத்தன மாரசிங்க, முன்னாள் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் அல்ஹாஜ் சுபைர், அத்தனகல்ல கிராம அபிவிருத்தி அதிகாரி ஸம்பத் மற்றும் அத்தனகல்ல பிரதேச சபைத் தேர்தலின், ஐ.தே.கட்சி வேட்பாளர் பவாஸ் மற்றும் உடுகொட அரபாவின் ஆசிரியர் எம். ரூமி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மற்றும் புதிய கட்டிடத்தின் இறுதிகட்ட வேலைகளை உடுகொட ஜின்னா இளைஞர் குழுவும் அரபா பாடசாலையின் பழையமாணவர்களையும் நலன்விரும்பிகளையும் படத்தில் காணலாம்.





கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)