நாட்டின் இந்நிலைக்கு காரணம் யார்? - அஷ்ஷெய்க் பழீல்

www.paewai.com
By -
0

ஜனாதிபதியின் இன்றைய சுதந்திர உரை Negative (எதிர்மறையான)தகவல்களையே உள்ளடக்கியிருந்தமையை அவதானிக்க முடிந்தது.


# நாட்டில் 50%ற்கு அதிகமானோர் வறுமையில் இருக்கிறார்கள்.

# நாடு போதை வஸ்த்துக் கடத்தலின் மையமாக உள்ளது.

# லஞ்சத்தை ஒழிக்க நாம் தவறிவிட்டோம்.

இது போன்ற அதிருப்தியான பல  தகவல்களை நாட்டின் தலைவர் தேசிய தினச் செய்தியின் போது பகிரங்கமாக முன்வைத்தமை எம்மை பலவாறும் சிந்திக்கத் தூண்டுகிறது.

ஏகாதிபத்தியத்தில் இருந்து சுதந்திரம் பெற்றதால் நாம் அடைந்த பலன்கள் இவை தான் என்றால் அந்த சுதந்திரத்தில் அர்த்தமே கிடையாது.

வெள்ளைக்காரன் ஆண்ட நாட்டை கொள்ளைக்காரர்கள் ஆளத்துவங்கி  இன்றுடன் 71 வருடங்கள்! என்று யாரோ ஒருவர் ஒரு கருத்தை whatsapp ல் பதிவேற்றம் செய்திருந்தார். அது ஒருவகையில் சரியாகவே தோன்றுகிறது.

இந்த தேசத்தை கட்டியெழுப்பும் பணியில் நாம் அனைவரும் இதயசுத்தியோடு உழைக்க வேண்டியிருக்கிறது. நாடு வளர்ந்தால் தான் நாமும் வளர முடியும்.

வரப்புயர நீருயரும் நீருயர நெல்லுயரும் நெல்லுயரக் குடியுயரும் குடியுயரக் கோலுயரும் கோலுயரக் கோனுயர்வான்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)