பல்கலைக்கழகத்தில் விழிப்புலனற்ற மாணவர்களுக்கான "ப்ரெய்லி" தட்டச்சு இயந்திரத்தை வழங்கி உதவினார் அலி ஸாஹிர் மௌலானா

Rihmy Hakeem
By -
0
இராஜாங்க அமைச்சரால் கிழக்கு பல்கலைக் கழக   விழிப்புலன் அற்ற மாணவர் நலன் கருதி பிரெய்லி தட்டச்சு இயந்திரம் வழங்கி வைப்பு  - புதிய உப வேந்தரையும் வாழ்த்தினார் -

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் விழிப்புலன் அற்ற மாணவர்களின் கற்றல் செயற்பாட்டுக்கு உதவும் முகமாக பிரத்தியோகமாக உள்ள பிரெய்லி தட்டச்சு இயந்திரம் ஒன்றை சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழான சமூக சேவை திணைக்களத்தின் ஊடாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்கள் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் ராகல்   இடம் கையளித்தார் -

இதன் போது சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் திலக் ஹெட்டியாராச்சி ,  இராஜாங்க அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் அம்ஜத் மௌலானா , கிழக்கு பல்கலைக்கழத்தின் பதிவாளர் பகீரதன்  மற்றும் நிதியாளர் பாரீஸ் உட்பட  சிரேஷ்ட விரிவுரையாளர்கள் , அமைச்சரின் இணைப்பாளர்கள் கலந்து கொண்டனர் .

குறித்த நிகழ்வின் போது புதிய உப வேந்தராக கடமைகளை ஆரம்பித்துள்ள F.C.ராகல் அவர்களுக்கு இராஜாங்க அமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார் .






கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)