துப்பாக்கி சூட்டில் மினுவாங்கொட "களு அஜித்" பலி!

Rihmy Hakeem
By -
0


ஜா-எல மஹவக்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த அஜித் குமார எனும் களு அஜித் என்பவரே இவ்வாறு துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இன்று இரவு 7.05 மணி அளவில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(அத தெரண)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)