15 இலட்சம் வாக்குகளுடன் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு

Rihmy Hakeem
By -
0
15 இலட்சம் வாக்குகளுடன் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்தாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பொதுஜன முன்னணிக்கு கிடைத்த 50 வீத வாக்குகள் ஜனாதிபதி தேர்தலிலும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைப்பதாகவும் இதனுடன் சுதந்திர கட்சியின் வாக்குகளும் சேர்த்து அவருக்கு கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான மற்றுமொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (19) மேல் மாகாண அழகியற்கலை அரங்கில் இடம்பெற்ற நிகழ்வின் போது கைச்சாத்திடப்பட்டது.

இந்த நிகழ்வில் இரண்டு கட்சிகளினதும் சிரேஸ்ட உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டிருந்ததுடன், ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ நிகழ்வுக்கு வருகை தந்ததை தொடர்ந்து இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

(அத தெரண)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)