ACMC கட்சியின் புத்தளம் மாவட்ட முக்கியஸ்தர்கள் சஜித்தை ஆதரிக்க தீர்மானம்

Rihmy Hakeem
By -
0
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது? என்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல்  கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் தலைமையில் புத்தளத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் தேசிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்று  கட்சியின் முக்கியஸ்தர்களால் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.

ஏற்கனவே வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் ACMC கட்சி முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தினை ஆதரிக்க ஏகமனதாக முடிவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)