கஹட்டோவிட்டவை சேர்ந்த பாதிமா அல்பா குருநாகல் மாவட்டத்தில் முதலிடம்

Rihmy Hakeem
By -
0


குருநாகல், கெகுணுகொல்ல தேசிய பாடசாலையை சேர்ந்த பாத்திமா அல்பா அவர்கள் க.பொ.த. உயர் தர தொழில்நுட்ப பிரிவில் குருநாகல் மாவட்டத்தில் முதலாவது இடத்தையும், அகில இலங்கை ரீதியில் நான்காவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் கம்பஹா மாவட்டம், கஹட்டோவிட்டவை சேர்ந்த (இரண்டாவது மொழி) தமிழ் ISA ஆகிய மொஹமட் அஸ்ஹர் மற்றும் உடுகொட அறபா மகா வித்தியாலய ஆசிரியை பரீகா ஆகியோரின் புதல்வியுமாவார்.

இதேவேளை கெகுணுகொல்ல தேசிய பாடசாலையிலிருந்து உயிரியல் விஞ்ஞான பிரிவில் தோற்றிய உடுகொட, திஹாரி பிரதேசத்தை சேர்ந்த மாணவி பாதிமா ரிம்ஸியா உயிரியல், பௌதிகவியல், இராசயனவியல் ஆகிய மூன்று பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)