அரசு நினைத்தாலும் அரிசியின் விலையை கட்டுப்படுத்த முடியாது

Rihmy Hakeem
By -
0

பயங்கரமாக உயர்ந்து நிற்கும் அரிசியின் விலையை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் பகீரதப் பிரயத்தனம் செய்கிறது
பல கடை உரிமையாளர்கள் வாங்கிய விலையைவிட குறைந்த விலையில் விற்பனை செய்யும்படி நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
அரசாங்கத்தின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது ,தேவையானது. நாட்டில் அரிசி மாபியா ஒன்று காணப்படுவதை மறுப்பதற்கில்லை. ஆனால் பிரச்சினையின் வடிவம் வித்தியாசமானது.

காலநிலை மாற்றத்தினால் நாடு பயங்கர பிரச்சினைகள் எதிர்கொள்கிறது. பிரதான அரிசி உற்பத்தி பிரதேசங்களான குருநாகல், பொலன்நறுவை ,கிழக்கு மாகாணம் போன்ற இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் 2020ஆம் ஆண்டு அரிசியை இறக்குமதி செய்யவேண்டிய ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

அரிசி மாத்திரமல்ல இடைவிடாது பொழியும் கடும் மழையினால் நாட்டின் மரக்கறி உற்பத்தியும் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது.
நாம் ஒரு பயங்கர நிலைமையை எதிர் கொள்கிறது.

#உலக #வங்கியின் #அறிக்கையின்படி 2050 #ஆம் #ஆண்டாகும் #போது #இலங்கையின் #மொத்த #சனத்தொகையில் #90 #வீதமான #மக்கள் #காலநிலை #மாற்றத்தினால் #பாதிக்கப்படுவர்.

குறிப்பாக இலங்கையில் தாழ் நிலங்களில் வாழும் மக்கள் வெள்ளப் பெருக்கினாலும் , மலை நாடுகளில் வாழும் மண்சரிவுகளாலும் பாதிக்கப்படுவர். மேலும் வேறு பல அனர்த்தங்களும் எதிர்காலத்தில் ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. காலநிலை அகதிகளை (Climate Refugees) முகாமை செய்வதில் அரசு பல இடர்பாடுகளை எதிர்கொள்கிறது.

நாட்டை யாருக்குமே ஆட்சி செய்ய முடியாத அளவுக்கு காலநிலை மாற்றம் உள்ளபோது எமது அரசியல் தலைவர்கள் வேறு விடயங்களை பேசிக் கொண்டிருக்கிறார்கள்

. எனவே இந்த அரசியல் தலைவர்களை நம்பி இருப்பதால் பயனில்லை சிவில் சமூகம் முடிந்தால் அரசின் உதவியுடன் பின்வரும் நடவடிக்கைகளில் அதிக கவனம் எடுக்க வேண்டும்.

01. தாழ்நில பிரதேசங்களில் வாழும் மக்களை நீண்டகால திட்டத்தின் அடிப்படையில் அவ்விடங்களில் இருந்து  வெளியேற்றி், அவர்களுக்கு வேறு குடியேற்றங்களை அமைத்து, அந்த இடங்களில் காடுகளை வளர்க்க வேண்டும்.

02. மண்சரிவு அபாயம் உள்ள இடங்களில் பாரிய மூங்கில் மரச் செய்கையை ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் மூங்கில் மரம் மண்சரிவு அபாயத்தை குறைக்க கூடியது. அத்துடன் விரைவாக வளரும் மூங்கில் மரத்தின் மூலம் பொருளாதார ரீதியான நன்மைகளையும் பெற முடியும்.


03. மழை நீரைச் சேமிப்பதற்கான பிரதேச மட்ட திட்டமிடல்கள் பிரதேச பொறியியலாளர்கள் திட்டமிட வேண்டும். இவை எதிர்காலத்தில் ஏற்படப்போகும் நீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு பெருமளவு உதவியாக அமையும்.

04. மழைவீழ்ச்சியின் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அதற்கு உவப்பான புதிய பயிர்களை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். பெரு மழையினால் வெங்காயம் போன்ற அத்தியவசிய உற்பத்திகள் நடக்கும் மாத்தளை, புத்தளம் மாவட்டங்களும் பாதிக்கப்பட்டிருப்பதால் விவசாயத்தில் புதிய நுட்பங்களை கையாள வேண்டும். குறிப்பாக மூலக்கூற்று உயிரியலை (Molecular Bio Agro Technology) பயன்படுத்துவது தொடர்பில் இலங்கையில் காணப்படக்கூடிய விரல் விட்டு எண்ணக்கூடிய மூலக்கூற்று துறை அறிஞர்கள் கவனம் எடுக்க வேண்டும்.

05.காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் கடல் அரிபைக் குறைப்பதற்கு Pandanus (தாழை) போன்ற கண்டல் தாவரங்களை கடற்கரைகளில் நட வேண்டும். இவை தொடர்பில் கரையோர உள்ளூராட்சி (VC/UC) நிறுவனங்கள் கவனம் எடுக்க வேண்டும் .

06. எமது நகர அபிவிருத்தி திட்டங்கள் பூரண சுற்றாடல் பாதுகாப்பு திட்டங்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட வேண்டும். உலக வங்கியின் அறிக்கையின்படி நாட்டின் பொருளாதாரம் காலநிலை மாற்றத்தினால் 7.7 % வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது.

இலவசக் கல்வியின் மூலம் கற்ற எமது பொறியியலாளர்களுக்கும் , ஏனைய விஞ்ஞானத்துறை சார்ந்தோருக்கும் நாட்டுக்காக செய்யவேண்டிய பாரிய பொறுப்பு உள்ளது. இதனை தேசக் கடமையாக நினைத்து அவர்கள் செயல்படுத்த முன்வரவேண்டும்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)