கத்தார் நாட்டில் உயிர்காக்கும் மருத்துவ பணியில் இருந்து கொண்டே தேசிய குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாகவும் இந்திய முஸ்லிம்களை அவமானப்படுத்தும் வாசகங்களுடன் தொடர்ந்து முகநூலில் பதிவிட்டு வந்த டாக்டர் வேலை இழந்துள்ளார்.
தோஹா நஸீம் அல் றஃபீஹ் மெடிக்கல் சென்டர் ஆர்த்தோ பிரிவில் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வந்த கேரளாவைச் சேர்ந்த டாக்டர் அஜித் ஶ்ரீதரன். தொடர்ந்து தனது முகநூல் பக்கத்தில் முஸ்லிம் விரோத கருத்துக்களை பதிவு செய்து வந்தது மருத்துவமனை நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்ததும் விளக்கம் கேட்கப்பட்டது.
இவரது பதில் திருப்தியளிக்காத நிலையில் தனது தவறுகளுக்காக மன்னிப்பு கடிதம் எழுதினார்.
ஆனாலும் நஸீம் அல் றஃபீஹ் மெடிக்கல் சென்டர் இவரிடம் ராஜினாமா கடிதத்தை பெற்றுக்கொண்டு வேலையை விட்டு அனுப்பி வைத்தனர்.!


