வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி முஸ்தீபு

  Fayasa Fasil
By -
0







கடும் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பிலான விடயங்களைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (23) அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவைக்கு விஜயம் செய்தார்.

இன்று காலை அநுராதபுரம் ஜனாதிபதி மாளிகையில் அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளை சந்தித்த ஜனாதிபதி நிவாரண வேலைத்திடம் தொடர்பாக கேட்டறிந்தார்.

இடம்பெயர்ந்தவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் சேமநல வேலைத்திட்டங்களை துரிதமாகவும், தொடர்ச்சியாகவும் முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளை ஜனாதிபதி இதன் போது அதிகாரிகளுக்கு வழங்கினார். நிவாரண பணிகள் 2 கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அனர்த்தத்தின் போத வழங்கப்படக்கூடிய நிவாரணம் மற்றும் அனர்த்த நிலை குறைவடைந்த பின்னர் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான வேலைத்திட்டங்களும் இதில் அடங்கியுள்ளன. இந்த பணிகளின் போது அரசாங்கம் மிகவும் பொறுப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டினார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)