அண்மையில் இடம்பெற்ற சிறந்த வர்த்தக நிறுவனங்களுக்கான விருது வழங்கல் (NBEA-2019 Awards) நிகழ்வில் FIGO HOLIDAYS நிறுவனம் இரு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.
Merit Award விருதை ( Hospitality & Tourism) சுற்றுலாத் துறையிலும், தேசிய ரீதியில் சிறந்த நிறுவனமாக இரண்டாம் இடத்துக்கான விருதையும் வென்று சாதனை படைத்துள்ளது.
இவ்விருது வழங்கும் நிகழ்வு கொழும்பு பிரபல ஹில்டன் ஹோட்டலில் கடந்த 13.12.2019ம் திகதி இடம்பெற்றது.
வர்த்தக நிறுவனங்களுக்கு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்நிகழ்வை வருடா வருடம் National Chamber of Commerce of Sri Lanka (NCCSL) நடாத்தி வருகின்றது.
இவ்விருது தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் வணிக நடவடிக்கைகளில் சிறந்து விளங்கியதுடன் தேசிய பொருளாதார செயன்முறைக்கு பங்களிப்பு நல்கிய நிறுவனங்களின் தரப்படுத்தலின்படி வழங்கப்படுகின்றது.
இவ்விருதானது சிறந்த வணிக அமைப்பை பின்பற்ற ஊக்குவிப்பதுடன் இலங்கை சர்வதேச ரீதியில் சிறப்பான நிறுவனங்களை கொண்ட நாடாக நிலை நிறுத்துவதற்கும் வழி அமைக்கின்றது.
2004ம் ஆண்டு முதல் NCCSL நடாத்திவரும் இம்முன்னோடியான விருது வழங்கலின் விளைவாக NBEA அதன் உயர்ந்த தராதரத்தையும் அங்கீகாரத்தையும், மதிப்பையும் வணிக சமூகத்தில் வென்றுள்ளது. இதன் விளைவாக “சிறந்த” மற்றும் “சிறந்ததில் சிறந்த” வணிக அடையாளப்படுத்தலின் குறியீடாக இலங்கையில் ( NBEA) National Business Excellence Award பரிணமித்துள்ளது.
Figo Holidays ஒரு முண்ணனி சுற்றுப்பயண சேவை வழங்கும் நிறுவனமாகும். அத்தோடு Sri Lanka Tourism (SLTDA) இன் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்நிறுவனம், 30 இற்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் நம்பிக்கையையும் வென்றுள்ளனர்.
மேலும் முதல் தர மற்றும் மிகச் சிறந்த நிறுவனம் என்ற பெயரை தொடர்ந்து நிலை நிறுத்துவதற்காக திருப்தியான பயண அனுபவங்களையும் மற்றும் தரமான சேவைகளையும் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க முயற்சிக்கின்றது.
மேலும் Figo Holidays நிறுவனம் அண்மையில் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட விருதான இலங்கையின் முண்ணனி சுற்றுலா நிறுவனம் - 2019 என்ற விருதை World Travel Awards - 2019 விருது வழங்கும் நிகழ்வு வியட்நாமில் இடம்பெற்ற போது பெற்று சாதனை படைத்ததும் குறிப்பிடத்தக்கது.
இதுவரை கிடைத்த வெற்றிகளுடன், 2020 ஆம் ஆண்டிலும் இலங்கைக்கு அதிகமதிகம் சுற்றுலாப் பயணிகளை தருவிக்க Figo Holidays நிறுவனம் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து செயற்படுகின்றது. இதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை நல்க இந்நிறுவனம் திடசங்கற்பம் பூண்டுள்ளது.
