அல்ஹம்துலில்லாஹ்!
இன்று கஹட்டோவிட்ட MLSC இல் நடைபெற்ற ஏழைச் சிறார்களுக்கான இலவச கத்னா வைபவத்தில், எமது ஊரையும் அயல் ஊர்களையும் சேர்ந்த 43 சிறுவர்களுக்கு கத்னா செய்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வை சிறப்பிக்க, MLSC இன் தலைவர் அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர், மௌலவி அப்துஸ் ஸலாம் (பலாஹி) உட்பட பல நலன் விரும்பிகள் வருகை தந்திருன்தனர்.
இதனை சிறப்பாக செய்து முடிப்பதில் எமக்கு பல வழிகளிலும் உதவிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்!
பிரபல தொழிலதிபர்களான எம்.வை.எம். முபீல் ஹாஜி, எம்.வை.எம். முகர்ரம் ஹாஜி ஆகியோரின் TRANSASIA மென்பொருள் நிறுவன
உரிமையாளர்களின் அனுசரணையில் இந்த வைபவம் இடம்பெற்றது.
Dr. ரிஷி, Dr. ரியாஸ் காஸிம், Dr. அலி ஸஜா ஆகியோரின் சிறப்பான பணியில் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்காக அணுசரனை வழங்கிய பரோபகாரிகள் அனைவருக்கும் அல்லாஹ்வின் அருளும், அபிவிருத்தியும், சுவனப் பூஞ்சோலையில் நிரந்தர இடமும் கிடைக்க பிரார்த்திக்கின்றோம்.
MLSC நிர்வாகம்




