தேர்தல் ஆணைக்குழு இத் தேர்தலை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணியில் இடுபட்டிருந்த குழுவினரின் இறுதி அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் எதிர்கால தேர்தலுக்கான பிரச்சார செலவு, சமூக ஊடகங்களின் செயற்பாடுகள் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்துவது தொடர்பில் சட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் இவர்கள் சிபார்சு செய்துள்ளனர்.
இந்த ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவின் இறுதி அறிக்கை இன்று நன்பகல் கொழும்பில் வெளியிடப்பட்டது. ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காப்பு குழுவின் தலைமை அதிகாரி திருமதி மரியா மாட்டியாஸ் தலைமையில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது.
இந்த அறிக்கையின் மூலம் 23 சிபார்சுகள் முன்வைக்கப்பட்டன. இலங்கையில் தேர்தல் செயற்பாடுகள் மற்றும் ஜனநாயகத்தை வலுவூட்டுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
தேர்தல் நடவடிக்கை மற்றும் வாக்களிப்பு அமைதியான முறையில் இடம்பெற்ற போதிலும் பிரச்சினைக்குரிய விடயங்கள் பல இருந்ததாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

