சீனாவில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப தூதரகம் நடவடிக்கை

Rihmy Hakeem
By -
0


சீனாவில் உள்ள இலங்கையர்கள் சிலரை இந் நாட்டுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பேஜிங் தலைநகரத்தில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தின் வர்த்தக அலுவல்கள் தொடர்பான தலைமை அதிகாரி எலக்ஷி குணசேகர இது தொடர்பாக தெரிவிக்கையில் கொரோனா வைரஸ் பரவாத இடங்களில் உள்ள இலங்கையர்களே இவ்வாறு அனுப்பிவைக்கப்படவிருப்பதாக தெரிவித்தார்.
சேன்கு மற்றும் பிஎஞ்சிங் ஆகிய இரண்டு நகரங்களில் உள்ள 40 பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கைக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்கள் தொடர்பில் நாம் கடவுச்சீட்டுக்களை திரட்டி வருகின்றோம் என்று அவர் தெரிவித்தார்.
பிஎங்சிங்கில் உள்ள மாணவர்களுக்கு பேஜிங் ஊடாக இலங்கைக்கு செல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இதேபோன்று சிஊவான் மாநிலத்தில் உள்ள இலங்கை மாணவர்கள் நேரடியாக விமானத்தின் மூலம் இலங்கைக்கு செல்ல முடியும். இவர்களை பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு நாம் தெரிவித்துள்ளோம். இந்த பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவியுள்ள ஹுவாங்காங் மாநிலத்தில் இலங்கையைச் சேர்ந்த 40 பேர் இருக்கின்றனர். இந்த வைரஸினால் பொரும் பாதிப்பு இந்த மாநிலத்திலேயே இடம்பெற்றுள்ளது.
இலங்கை மாணவர்களுக்கும் அங்குள்ள 35 தொடக்கம் 40 இலங்கையர்களும் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் சீன அதிகாரிகள் நகரத்தினுள் பிரவேசிக்கவோ அல்லது நகரத்தில் இருந்து வெளியேறவோ அனுமதி வழங்கவில்லை.
இது தொடர்பாக நாம் சீன அதிகாரிகளிடம் கலந்துரையாடினோம். இவர்களை வீடுகளில் இருக்குமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாநிலத்தில் இருந்து இலங்கைக்கு நேரடி விமாக சேவை இல்லை.
தூதரக அலுவலக அதிகாரிகள் இந்த நகரத்தில் உள்ள இலங்கையர்களுடன் Wechat சமூக ஊடகத்தின் மூலம் இவர்களுடன் தொடர்புகொண்டு இவர்கள் தேவைகளை கண்டறிவதாகவும் மேலும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)