சதொச விற்பனை நிலையத்தில் 35 ரூபா பெறுமதியான பொருட்களை திருடியவர்கள் கைது

Rihmy Hakeem
By -
0


வவுனியா சதொச விற்பனை நிலையத்தில் 35 ரூபா பெறுமதியான பொருட்களை திருடி தப்பியோடிய மூன்று பெண்களையும் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பனதுறை பிரதேசத்தில் வசிக்கும் 22, 45 மற்றும் 62 வயதுகளை உடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் உள்ள வர்த்தக நிலையங்களிலும் திருடியுளள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வவுனியா தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அததெரண 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)