தமிழ் நாட்டின் அதிராம்பட்டினத்தில் இயங்கி வரும் அதிரை எப்.எம். (90.4) அலைவரிசையின் 4வது ஆண்டு துவக்க விழா மற்றும் நேயர்கள் சந்திப்பு அண்மையில் அதிராம்பட்டினத்தின் இமாம் ஷாபி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
உலக அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீது நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு, மற்றுமொரு அதிதியாக இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளரும், சியனே ஊடக வட்ட தலைவருமான அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்புரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.







