"இன்னும் பல ஜிப்ரிகள் உருவாக்கப்படவேண்டும்" - அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிபர் முன்னணி மற்றும் சியனே ஊடக வட்டம் சார்பில் அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர்
ஏ.ஆர்.எம்.ஜிப்ரி என்ற ஓர் ஒலிபரப்பாளர், ஒரு அறிவிப்பாளர், ஒரு ஆசிரியர், ஒரு அதிபர், ஒரு திட்டமிட்டு வாழ்கையினை அமைத்து முன்னேறிய சிறந்த மனித நேய பண்பாளரை நாங்கள் இழந்து தவிக்கிறோம்.
அவரது இடைவெளியை நிரப்ப எங்களிடம் யாரும் இல்லை. இன்னும் பல ஜிப்ரிகள் உருவாக்கப்படவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.
ஒலிபரப்புத் துறையிலே என்னுடைய 40 ஆண்டுகால பயணத்தில் 30 ஆண்டுகாலம் இருவரும் இணைந்து கலந்து பயணித்தோம். ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்கள் கல்வித்துறையில் மாத்திரமல்லாமல் ஒலிபரப்புத் துறையில் அறிவிப்பாளராக, நிகழ்ச்சித் தொகுப்பாளராக, மேடை அறிவிப்பாளராக, நாடக கலைஞராக, செய்தி வாசிப்பாளராக நான் அவரை பார்த்திருக்கிறேன். நான் முஸ்லீம் சேவையில் பணிப்பாளராக கடமையாற்றிய காலத்தில் பல நிகழ்ச்சிகளுக்கு என்னை அதிதியாக அழைத்துக்கொண்டார்.
காயல்பட்டணத்திலே காயல் ஷெய்க் முஹம்மத் அவர்கள் இற்றைக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் வபாத் ஆன போது அங்கே அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் அந்த ஜனாஸாவிலே கலந்து கொண்டார்கள். அந்த நேரம் நான் புதன்கிழமைகளில் கருத்துக்களம் என்ற நிகழ்ச்சியை நடாத்திக்கொண்டிருந்தேன். அந்த நேரம் நண்பர் ஜிப்ரி அவர்கள் தொடர்பு கொண்டு வினவியதனால் என்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி அவரை இணைத்துக்கொண்டு காயல் ஷெய்க் முஹம்மத் அவர்களது நல்லடக்கத்தில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களுடன் பேச வைத்தேன். நான் உலக மக்களுக்காக அதனை ஒலிபரப்பு செய்தேன். அந்த நினைவுகளை மீட்டிப்பார்க்கிறேன்.
மேலும் மீடியா போரத்தில் நான் செயலாளராக ஸ்தாபக அங்கத்தவராக இருந்த போது நாங்கள் செய்த பயிற்சிப் பட்டறைகளில் சிறந்த வளவாளராக கலந்து கொண்டார். இளம் அறிவிப்பாளர்கள் உருவாவதற்கு ஏ.ஆர்.எம்.ஜிப்ரி ஒரு காரணகர்த்தாவாக இருந்து கொண்டிருக்கிறார். அவர்களை இழந்தது நாம் அடைய முடியாத ஒரு இழப்பு.
அவரை ஒளிப்பரப்புத்துறையில் மட்டுமல்லாது சிறந்த பண்புள்ள மனிதராகவும் நான் .பார்த்திருக்கிறேன். நீங்கள் பணிப்பாளர் பதவியில் இருந்து மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக பாடுபடும் நல்ல நிர்வாகி என்று என்னை தட்டிக்கொடுத்தார்.
அல்லாஹுதஆலா அன்னாரது பாவங்களை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று துஆ செய்கிறேன். சியனே ஊடக வட்டத்தின் ஸ்தாபக தலைவர் மற்றும் அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிபர் முன்னணி ஆகியவற்றின் பொது செயலாளர் என்ற வகையிலும் என்னுடைய இரங்கல் செய்தியை தெரிவித்துக்கொள்கிறேன்.