ஆபத்தில் சிக்கவைக்கிறதா ஆதார் அட்டை...

  Fayasa Fasil
By -
0
ஆண்டு வருமானம் ரூபாய் 2.50 லட்சத்துக்கும் அதிகமாக ஈட்டுபவர்கள் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு விவரங்களை வழங்காவிட்டால், அவர்கள் ஊதியத்திலிருந்து வரியாக 20 சதவீதம் பிடிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.கடந்த 16-ம் தேதி வருமான வரித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையின் படி, ஊழியர்கள் அனைவரும் தங்களை பணியமர்த்திய நிறுவனத்திடம் தங்கள் பான் மற்றும் ஆதார் விவரங்களை வழங்கி இருக்க வேண்டும்.
அப்படி வழங்காதவர்களிடம் டிடிஎஸ்-ஆக 20 சதவீதம் ஊதியத்திலிருந்து கழிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறை ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image copகடந்த 16-ம் தேதி வருமான வரித்துறை வெளியிட்ட 86 பக்க சுற்றறிக்கையில் "வருமான வரிச்சட்டம் பிரிவு 206ஏஏ-படி ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கு மேல் ஊதியம் பெறுபவர்கள் பான் கார்டு, ஆதார் விவரங்களைத் தெரிவிப்பது கட்டாயமாகும். இந்தப் பிரிவின் கீழ் பெறக்கூடிய வருமானம் வரிப் பிடித்தத்திற்கு உட்பட்டதே.
ஒரு ஊழியர் பான்கார்டு, ஆதார் விவரங்களை வழங்கத் தவறும்பட்சத்தில் அவரின் ஊதியத்தில் இருந்து 20 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாகவோ பிடித்தம் செய்ய அவரே பொறுப்பாகிறார். ஒருவேளை ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், எந்த விதமான வரியும் வசூலிக்கப்படாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
பிபிசி 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)