புத்தளத்தை சேர்ந்த Dr. Eng. Nibraz Ajith, Robotic Technology துறையில் கலாநிதி (PhD) பட்டம் பெற்று தனது ஊரான புத்தளத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். கடந்த 22ம் திகதி ஜனவரி மாதம் 2020 பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது இவரிற்கான கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக Global University USA ஐ சேர்ந்த Prof Dr. F.Curts Cherry, ஜெர்மன் நாட்டை சேர்ந்த Prof Dr. Allan, இந்தியப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் பல நாடுகளின் அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.
புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் தனது கல்வியை
Dr. Eng. Nibraz Ajith பயின்றார். பின்னர், B.Tech in Computer Science, BCS-HEQ (British Computer Society), B.Eng(Hons) in Robotic Engineering, MBA in International Business, Dip.in Computer System & Design. பயின்றுள்ளதுடன் Robotic & Artificial Intelligence துறையில் கூடுதல் கரிசனை செலுத்தியுள்ளார் மற்றும் அதே துறையில் இலங்கையில் CERA - Centralization of Excellence Robotic Application எனும் நிறுவனத்தில் பொறியியலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகத்தில் Robotic இளமானி பட்டப்படிப்பை பயின்று தற்போது அந்த துறையிலேயே கலாநிதிப்பட்டத்தினையும் பெற்றுள்ளார்,
இவர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் புத்தளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அஜித் முகமது சமீன், மீரான் முகைதீன் ரமிஸா ஆகியோரின் 2 வது பிள்ளை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

