இலங்கை பொலிஸ் சேவையில் பயிலுநர் பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் கணிதம் /தாய்மொழி உட்பட இரண்டு அமர்வுகளுக்கு மேற்படாமல் குறைந்த பட்சம் 6 பாடங்களில் சித்தி அடைந்திருக்க வேண்டும்.
இரண்டு தடவைகள் பரீட்சைக்கு தோற்றிய விண்ணப்பதாரர்கள் ஒரே அமர்வில் 5 பாடங்களில் கணிதம் / தாய்மொழி இரண்டு பாடங்களில் அல்லது ஒரு பாடத்திலேனும் சித்தி அடைந்திருத்தல் வேண்டும். விண்ணப்ப முடிவுத் திகதி அன்று 18 தொடக்கம் 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
இது தொடர்பான அறிவிப்பு இன்று (24) வெளியான வர்த்தமானியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரச தகவல் திணைக்களம்)

