கட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு

Rihmy Hakeem
By -
0
லயன் எயார் விமானத்தில் பயணித்த மற்றுமொரு பயணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருடைய நிலைமை மோசமாக உள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த விமானத்தில் பயணித்த நிலையில் உயிரிழந்த இருவரது சடலங்கள் இன்று (13) காலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டன.
இந்தோனேஷிய பிரஜைகளான 64 வயது ஆண் மற்றும் 74 வயது பெண் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
285 பயணிகளுடன் பயணித்த லயன் எயார் விமானம் அதிகாலை 2.45 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் இருந்து இந்தோனேஷியா நோக்கி சென்ற விமானத்தில் பயணித்த பயணிகள் இருவருக்கு ஏற்பட்ட  திடீர் சுகயீனத்துக்கு சிகிச்சையளிக்கும் நோக்கில் தரையிறக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த பயணிகள் இருவரும் உயிரிழந்த நிலையிலேயே  வைத்தியசாலைக்கு கொண்டுச்செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் மிரர் 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)