அவசரமாக சிறுநீரகம் தேவை- உயிர் காக்க உதவுமாறு வேண்டுகோள்

  Fayasa Fasil
By -
0


                        உடுகொட ஹிஜ்ரா மாவத்தையில் வசிக்கும் ஏ.சி.எம். நாஸிர் என்பவருடைய இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு விரைவாக சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சையொன்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் கொழும்பு அரச வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு தந்தையான இவர் வறுமை நிலையில் காணப்படுகின்றார். இவர் தொழில்கள் செய்வதற்கும் முடியாத நிலையில் கட்டில் படுக்கையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதனால், இவருக்கு தகுதியான சிறுநீரகத்தை தானம் செய்வதற்கோ அல்லது சிறுநீரகமொன்றை விலைக்குப் பெற்றுக் கொடுப்பதற்கோ விரும்பும் நல்லுள்ளம் படைத்தவர்களிடமிருந்து உதவிகளை அவரது குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

‘‘ஓ” பொசிடீவ் ரக சிறுநீரகத்தை வழங்கி உதவி செய்ய விரும்புவோர், கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற முடியும்.
ஏ.சீ.எம். நாஸர் – 0765656127
ஏ.சீ.எம். அக்ரம் – 0770494427

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)