கட்டாரின் சக்தி வலு விவகார அமைச்சர் - பிரதமர் மஹிந்த சந்திப்பு

Rihmy Hakeem
By -
0
கட்டார் நாட்டின் சக்தி வலு விவகாரத்துறை அமைச்சர் சாத் ஷெரிதா அல் காபி (Saad Sherida Al Kaabi)  தலைமையிலான கத்தார் தூதுக்குழுவினருக்கும்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையில் சந்திப்பு இடம்பற்றுள்ளது.

கொழும்பில் நேற்று (26) இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலுள்ள நல்லுறவு , சக்தி வலு துறையில் மேலும் ஒத்துழைப்பு தொடர்பில்  இரு தரப்பினரும் கலந்துரையாடியதுடன்,  சுற்றுச்சூழல் நட்பு எரிசக்தி தீர்வுகளைக் கண்டறிய வேண்டியதன் அவசியம் தொடர்பிலும்  கவனம் செலுத்தினர்.

இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 1976ஆம் ஆண்டில் அரம்பமானது.. 2018ஆம் ஆண்டில் கட்டார் உடனான இலங்கையின் மொத்த வர்த்தகம் 118மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. கட்டாருடன் வர்த்தகத்தை ஊக்குவிப்பதில் இலங்கை அதிக ஆர்வம் கொண்டுள்ளது. கட்டார் முதலீட்டாளர்களை இலங்கையில் வர்த்தகம் செய்வதற்கான முதலீட்டு ஊக்குவிப்பிலும் இலங்கை கவனம் செலுத்துகிறது. 

இந்த சந்திப்பில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் பிரதமர் செயலாளர் காமினிசெனரத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)