சரண குணவர்தனவுக்கு பிணை

Rihmy Hakeem
By -
0


3 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை அடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவுக்கு 3 வருட கடூழிய சிறைத் தண்டனையை கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன, இன்று (07) பிறப்பித்திருந்தார்.
மோசடியான முறையில் நிதி பரிவர்தனைகளின் ஊடாக அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில்  இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
சரண குணவர்தன, அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக இருந்த போது, 2007ஆம் ஆண்டு மே மாதம் 05ஆம் திகதி முதல் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

Tamilmirror 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)