கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து முக கவசத்தை அதிக விலைக்கு விற்பனை செய்வோரை முற்றுகை இடுவதற்கு நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகாரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
எந்தவொரு மருந்தகம் அல்லது விற்பனை நிலையங்களில் இவ்வாறு கூடுதலான விலைக்கு இவை விற்பனை செய்யப்படுமாயின் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள அதிகார சபை தீர்மானித்துள்ளது.
கூடுதலான விலைக்கு முக கவசம் விற்பனை செய்யப்படடுவதாக பலர் முறையிட்டிருப்பதாகவும் அதிகார சபை பணிப்பாளர் நாயம் எம்.எஸ்.பௌஷ தெரிவித்துள்ளார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

