உலக வர்த்தக மைய கட்டிடத்தில் நினைவிழந்து விழுந்தவருக்கு கொரோனா வைரஸ் இல்லை ; காலையில் சாப்பிடாததே காரணம்

Rihmy Hakeem
By -
0
தனது தனிப்பட்ட தேவைக்காக மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த ஒருவர் உலக வர்த்தக மைய கட்டடத்தில் நினைவிழந்து விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இன்று (28) பகல் நேரத்தில் இச்சம்பவம் நடந்த நிலையில் குறித்த நபர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக செய்திகள் பரவியிருந்தன.

இந்நிலையில், அந்த நபர் காலை மற்றும் பகலுணவு உட்கொள்ளாத காரணத்தினாலேயே நினைவிழந்து விழுந்ததாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)