வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்த கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டிகள்

Rihmy Hakeem
By -
0
கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வுகள் கஹட்டோவிட்ட பொது மைதானத்தில் நேற்றைய தினம் (23) சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

ஸபா, மர்வா, மினா ஆகிய இல்லங்களுக்கிடையிலான போட்டிகளின் முடிவில் ஸபா இல்லம் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று சாம்பியன் இல்லமாக தெரிவு செய்யப்பட்டது. இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை மர்வா மற்றும் மினா ஆகிய இல்லங்கள் பெற்றுக்கொண்டன.

நிகழ்வின் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன அவர்களும் மற்றும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தமை விசேட அம்சமாகும்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)