விசேட உரையாற்ற ரஞ்சனுக்கு சந்தர்ப்பம் மறுப்பு

Rihmy Hakeem
By -
0
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைய, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விசேட உரையொன்றை ஆற்றுவதற்கு சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்க முடியாது என, சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.
எனினும், நாடாளுமன்றில் விவாதமொன்று இடம்பெறும் சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவின் நேரத்தை பெற்று தேவையான உரையை ஆற்ற முடியும் என்றும் சபாநாயகர் கூறியுள்ளார்.
சர்ச்சைக்குரிய அலைபேசி உரையாடல்கள் விவகாரம் தொடர்பில், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க எம்.பி, நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்காக வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilmirror 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)